1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (19:32 IST)

வெற்றிச்சான்றிதழை பசுவின் காலடியில் வைத்து வணங்கிய வீரர்

தமிழகத்தில் பசுமாடு மற்றும் காளை மாடுகளை செல்ல பிராணிகளாக மட்டுமின்றி தங்களுடைய குழந்தைகளில் ஒன்றாக வளர்க்கும் வழக்கம் பல தலைமுறைகளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இதேபோல் மல்யுத்த வீரர் ஒருவர் தான் மல்யுத்த போட்டியில் பெற்ற வெற்றி சான்றிதழை தான் ஆசை ஆசையாய் வளர்த்த பசுவின் காலடியில் வைத்து வணங்கியுள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் ஒருவர் தான் வாங்கிய வெற்றி சான்றிதழை பசுவின் காலடியில் வைத்து, அந்த பசுவை கட்டிப்பிடித்து பாசமுடன் அணைக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தன்னுடைய உடல் இந்த அளவுக்கு கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு அந்த பசு கொடுத்த பாலை குடித்ததால்தான் என்று அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கால்நடைகளை விலங்காக பார்க்காமல் தனக்கு வெற்றியை தந்த குருவாக பார்க்கும் அந்த வீரரின் மனப்பான்மையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.