வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பசுக்களின் துயர் கண்ட சிவயோக்கியார் திருமூலர் ஆனது எப்படி....?

சித்தர்களில் முதன்மையானவர் திருமூலர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர்.
அஷ்டமா சித்திகளனைத்தும் கைவரப் பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சில காலம் தங்குவதற்கு எண்ணி தான்  வாழ்ந்த கயிலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தெந்திசை நோக்கிச் சென்றார். வழியில் திருக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம்(காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி. திருவாலங்காடு காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து  மகிழ்ந்தார். 
 
சாத்தனூரிலே மாடு மேய்க்கும் மூலன் என்பவர், தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். அதை கண்ட பசுக்கள்  அவனது உடம்பை சுற்றி சுற்றி வந்து கதறி வருந்தி கண்ணீர் விட்டது.
பசுக்களின் துயர்கண்ட திருமூலருக்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான ஓரிடத்தில் கிடத்திவிட்டு கூடு விட்டுக் கூடு பாய்தல் என்னும் வழியில் தமது உயிரை மூலனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித்  திருமூலராய் எழுந்தார்.
 
மூலன் எழுந்ததும் பசுக்கள் மகிழ்ந்தும் அன்பினால் நக்கி மோந்து, களிப்போடு துள்ளி குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நனறாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்து வீடு திரும்பின.
 
அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலரின் மனைவி மூலரின் வடிவில் இருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல என்றும் அவன் இற்ந்துவிட்டான் என்றும் கூறினார். மூலனின் மனைவி அழுது நின்றாள். திருமூலர்  அவ்வூர் பெரியோர்களிடம் நடந்ததைக் கூறி தான் எற்றிருந்த உடலிலிருந்து விலகி தான் ஒரு சிவயோகியர் என்று நிரூபித்தார். மறுபடியும்  மூலரின் உடம்பில் புகுந்தார். இதை கண்ட சான்றோர்கள் மூலனீன் மனைவியை தேற்றி ஆறுதல் கூறி விட்டு சென்றனர். 
 
சிவயோக்கியார் தன் உடலை தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாடுதுறைக் கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்றிருந்த நன்னெறிகளை விலக்கும் திருமந்திரம்மென்னும் நூலை ஓராண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப்  பாடியுள்ளார்.
 
திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும் கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர்  சமாதியை மூலவராகக் கொண்டு கருவூரார் சிதம்பரம் கோயிலை அமைத்தார்.