வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (17:30 IST)

9 மாதங்களில் சுமார் 10 ஆயிரம்.. இந்தியாவில் BMW கார்கள் விற்பனை அதிகரிப்பு..!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக BMW கார்கள் உட்பட விலை உயர்ந்த கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு 9 மாதங்களில் சுமார் 10,000 BMW கார் விற்பனை ஆனதாக தகவல் வெளியாகி உள்ளன.

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 9580 BMW கார்கள் இந்தியாவின் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த விற்பனை எண்ணிக்கை என்பது புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையானதை விட இந்த ஆண்டு 10% அதிகமாக BMW கார் விற்பனை ஆகி உள்ளது என்றும் இனி வரும் மாதங்களில் இன்னும் அதிகமாக விற்பனையாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

Edited by Siva