1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 21 ஜனவரி 2023 (19:20 IST)

ஜம்முவில் இரண்டு பகுதிகளில் குண்டுவெடிப்பு..ராகுலின் ''பாத யாத்திரைக்கு'' எச்சரிக்கை

ragul gandhi
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலையில் இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ராகுல் பாரத் ஜடோ யாத்திரைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

ஜம்முவில் உள்ள  நர்வாலில் உள்ள தொழிற்பேட்டையில் இன்று இரண்டு இடங்களில் தொடர்ந்து குண்டுவெடித்தது. இதில், 6 பேர் பலியாகினர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர். படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்னர்.

இந்த சம்பவத்தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  உடனே, பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதியைக் கொண்டு வந்ததுடன், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பாரத் ஜடோ என்ற  நாடு தழுவிய யாத்திரை நடந்து வரும் நிலையில்,  இந்த யாத்திரை நிறைவடைய இன்னும் 4 நாட்கள் உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராகுலின் பாரத் ஜடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.