1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:17 IST)

உடல்நலக்குறைவில் மணமகள்.. மருத்துவமனையில் தாலி கட்டிய மணமகன்..!

bride1
உடல்நலக்குறைவில் மணமகள்.. மருத்துவமனையில் தாலி கட்டிய மணமகன்..!
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கு திடீரென திருமண நேரத்தில் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மணமகன் மருத்துவமனைக்கு சென்று அவருக்கு தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென மணப்பெண்ணுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து ஏழ்மை நிலையில் உள்ள இரு வீட்டார் கலந்து ஆலோசித்து மீண்டும் திருமணத்திற்கு செலவு செய்ய முடியாது என்று கூறியதோடு மருத்துவமனையில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் மற்றும் பிற நோயாளிகளின் ஆசிர்வாதத்துடன் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். 
 
சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளதால் மணப்பெண் உள் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 
 
உடல்நலக் குறைவாக சிகிச்சை பெற்று வந்த போதிலும் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. மேலும் நெட்டிசன்கள் பலர் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva