திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2020 (16:29 IST)

பாஜகவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரசாரம் !... ஒன்றரை கோடி பார்வையாளர்கள் !

பாஜகவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரசாரம்
டில்லியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையான Deepfake ஐ பயன்படுத்திய சமீபத்தில் நடைபெற்ற டில்லி சட்டசபை தேர்தலில், அம்மாநில பாஜக தலைவர் திவாரி பிரச்சாரம் செய்துள்ளார்.
 
சமீபத்தில் நடைபெற்ற டில்லி சட்டமன்ற தேர்தலில் , டில்லி பாஜக  தலைவர் மஜோன் திவாரி,  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்படுத்தியன் மூலம் 44 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோவை உருவாகினார். இந்த தொழில்நுட்பத்தில் உள்ள அம்சம் என்னவென்றால், ஒருவர் ஒரு மொழியில் பேசினால் அதை பல மொழிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்பது முக்கிய காரணம் ஆகும்.
 
மனோஜ் திவாரி பேசிய வீடியோ, 5800 வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது, டில்லியில் மட்டும் சுமார் ஒன்றரை கோடிப் பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.
 
இந்த செயற்கை நுண்ணறிவு ஆப்பால் சில சர்ச்சைக்குரிய பேச்சுகள் சேர்க்கப்பட்டு பகிர  வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள்  கூறியுள்ளனர்.