செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 25 ஜூலை 2020 (16:08 IST)

மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி…போலீஸார் நடவடிக்கை ?

சென்னை மீனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வந்த கணவரை இழந்த முதாட்டிக்கு அருகே வசித்து வந்த மருத்துவரும் பாஜகவில் மாணவர் அணியின் பொறுப்பில் உள்ளவருமான சுப்பையா என்பவர் அடிக்கடி தொல்லை கொடுத்ததுடன் அந்த மூதாட்டி கார் நிறுத்தி வைக்கும் இடத்தில் அவர் சிறுநீர் கழித்த்தாகத் தெரிகிறது.

இதுகுறித்து மூதாட்டித் தனக்குத் தெரிந்தவர் ஒருவர் மூலம், சுப்பையா மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.ஆனால் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்காத நிலையில் எதிர்கட்சி பிரமுகர்கள் இப்பிரச்சனைக்குக் குரல் கொடுத்ததன் மூலம் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.