செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (20:48 IST)

பிசிசிஐயும் கைக்குள் போடப்பார்க்கும் பாஜக...

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் ஆட்சியை கைப்பிடித்து தேசிய கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், பாஜக பிசிசிஐ-யிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் உள்ள 31 மாநிலத்தில் 21 மாநிலத்தில் தேசிய கட்சியான பாஜக ஆட்சியை பிடித்து உள்ளது. இந்நிலையில், பாஜகவின் முக்கிய தலைவரான அமித்ஷா குஜராத் கிரிக்கெட் சங்கம் தலைவராக உள்ளார். அவரின் மகன் ஜெய்ஷா குஜராத் மாநில கிரிக்கெட் சபை கௌரவ செயலாளராக உள்ளார்.
 
குஜராஜ் கிரிக்கெட் சங்கம் மட்டுமல்லாமல் பிசிசிஐ நிர்வாகியாகவும் பாஜகவை சேர்ந்தவர்கள் வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் அதிகம் வருவாய் ஈட்டும் கிரிக்கெட் நாடுகளில் இந்தியாவின் பிசிசிஐ முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இதனால் கிரிக்கெட் நிர்வாகமும் பாஜக வசம் செல்ல வாய்ப்புள்ளது என தெரிகிறது. இந்த தகவலை லோதா கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.