வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 மார்ச் 2018 (14:42 IST)

மேகாலயாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை! ஆட்சி அமைப்பது யார்?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று மாநில தேர்தல்களில் திரிபுரா, நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் மேகாலயாவில் யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான 31 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் இங்கு கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு உள்ளது.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க இன்னும் 8 தொகுதிகள் தேவை. இந்த நிலையில் NPP 15 தொகுதிகளிலும் மற்றவை 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

பாஜக இந்த மாநிலத்தில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது இருப்பினும் ஆட்சி அமைக்க பாஜக தலைவர்கள் களத்தில் இறங்கிவிட்டதாகவும், காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்கவிடாமல் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளை வளைத்து கூட்டணி அமைக்க தீவிர முயற்சி செய்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பாஜக – என்.பி.பி கூட்டணி சார்பில் இதர கட்சிகளான யு.டி.பி மற்றும் பி.டி.எப் கட்சிகளூடன் கூட்டணி அமைக்க இம்மாநிலத்தின் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் ராம் மாதவ் மற்றும் ஹிமாந்தா ஆகியோர் களத்தில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே இந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றம் கிடைக்குமா? அல்லது கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்