திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 4 மார்ச் 2018 (15:06 IST)

இத்தாலியில் தேர்தல் நடக்குதாம்....ராகுல் காந்தியை கேலி செய்த அமித் ஷா

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்துள்ளார்.

 
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 6 மாநிலங்களை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராகுல் காந்தியை கேலி செய்துள்ளார். இத்தாலியில் கூட தேர்தல் நடக்குதாம் வாட்ஸ்அப்பில் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.