1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (13:12 IST)

கம்யூனிஸ்ட் கட்சிகள் சங்கீகளாக மாறிவிட்டீர்களா? மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு பாமக கேள்வி..!

மத்திய அரசுக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுத்து வரும் மதுரை எம்பி சு வெங்கடேசன் கள்ளச்சாராய மரணம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து எந்தவித பதிவும் செய்யாமல் இருப்பதை பாமகவின் திலகபாமா கண்டித்துள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு எதிராக பேசினார். அவருக்கு எழுத்தாளருக்கு வரலாறு தெரியவில்லை. பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருக்கும் மன்னர்களை தான் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.  சு.வெங்கடேசனுக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா உள்ளது.

தமிழ் வரலாற்றில் இந்த மண்ணில் மக்களுக்கு நீதி பெறுவதற்கு எத்தனை மன்னர்கள் இருந்தனர். அதுவும் செங்கோல் வளைந்ததற்காக உயிரை விட்ட பாண்டிய மன்னன் இருந்த இந்த மதுரை மண்ணில் இருந்து கொண்டு சு.வெங்கடேசன் இப்படியாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்காகவும், கள்ளச்சாராய விவகாரம் குறித்து இதுவரை பேசவில்லை.  திமுக அரசை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி சங்கிகளாக மாறிவிட்டதா? என்று பாமகவின் திலகபாமா அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

Edited by Siva