திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (17:42 IST)

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் இருவர் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தின் பகுதிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் தற்போது காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று இருவர் நுழைந்த நிலையில் நாளை துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் ஏன் நுழையக்கூடாது என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
 இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குளறுபடியால் நமது ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்திற்கு ஆபத்தான அச்சுறுத்தல் என்றும் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக தாமதம் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran