திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (19:43 IST)

பாஜகவினரை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதி செய்கிறார். அமைச்சர் குற்றச்சாட்டு

கேரளாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதவி செய்கிறார் என்று பாஜக அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார்.


 

 
கேரளாவில் பாஜகவினர் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஜன் ரக்‌ஷா யாத்ரா நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேரள முதல்வர் பிரணாயி விஜயன் மீது குற்றம்சாட்டினார்.
 
அவர் கூறியதாவது:-
 
கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஈடுபடும் வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. சிபிஎம் கட்சி தேச விரோத சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறது. இந்நேரம் காங்கிரஸ் மத்தியில் இருந்தால் கேரளாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும்.
 
ஆனால் பாஜக இடதுசாரிகளுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுகிறது. பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தொண்டா்களை கொலை செய்ய மாநில அரசு நிதியுதவி செய்கிறது என குற்றம் சாட்டினார். 
 
மேலும் இந்த ஜன் ரக்‌ஷா யாத்ரா வரும் 17ஆம் தேதி முடிவடைகிறது. அதில் பல பாஜக மூத்த தலைவர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.