1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (08:44 IST)

மக்கள் தொகை கெடக்கு.. நிறைய குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்! – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Raguraj singh
பாஜக அமைச்சர் ஒருவர் இளைஞர்கள் பல குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை அதிகமான நாடுகளில் சீனா, இந்தியா முதல் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான சட்டங்களை பின்பற்றி குழந்தை பிறப்பு விகிதத்தை குறைத்தது. ஆனால் தற்போது எதிர்காலத்தில் இளைஞர்களுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்பதால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவித்து வருகிறது.

இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடியை தாண்டியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விழா ஒன்றில் பேசிய உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் “மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாம் முயற்சி செய்ய தேவையில்லை. நமது இளைஞர்கள் இரண்டு அல்ல, குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் பராமரிக்க முடியாவிட்டால் எங்களிடம் கொடுங்கள். நாங்கள் வளர்க்கிறோம்” என பேசியுள்ளார்.

இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து சமீபத்தில் சீனாவை தாண்டி விட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K