வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 மே 2019 (18:47 IST)

இந்திரா காந்தியைப் போல் நான் கொல்லப்படலாம் – அரவிந்த் கெஜ்ரிவால் அச்சம்!

நான் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி போல எனது பாதுகாவலராலே கொல்லப்படலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டு போராடி வருகிறார். டெல்லியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளுக்குப் போட்டியாக இருந்து வருகிறார். இரண்டு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பஞ்சாப்பில் உள்ள ஒரு ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், ‘இந்திரா காந்தி அவரது பாதுகாவலரால் கொல்லப்பட்டது போன்று என்னையும் பா.ஜனதா என்னுடைய பாதுகாவலரை வைத்து கொலை செய்யலாம். என்னுடைய பாதுகாவலர்களிடம் இருந்து பாஜக தகவல்களைப் பெற்று வருகிறது. பாஜக என்றாவது ஒருநாள் என்னைக் கொல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.