பக்கோடா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்!

Last Modified புதன், 15 மே 2019 (19:41 IST)
பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற கேள்விக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பதிலளித்த பிரதமர் மோடி பக்கோடா விற்பது கூட ஒரு நல்ல வேலைதான். அதில் ரூ.200 தினமும் சம்பாதிக்கலாம் என்று கூறினார்
பிரதமரின் இந்த பதிலுக்கு காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். வேலை என்பதற்கும் சுயவேலை வாய்ப்பு என்பதற்கும் உரிய வித்தியாசம் கூட பிரதமருக்கு தெரியவில்லை. வேலை வாய்ப்பு என்பது அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது. பக்கோடா விற்பனை செய்வது என்பது மக்கள் தாங்களாகவே வேலையை தேடிக்கொள்வது என்று பதிலடி கொடுத்தனர்
இந்த நிலையில் இன்று சண்டிகாரில் பிரதமர் மோடி பேரணி ஒன்றில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் பேரணிக்கு கலந்து கொள்ள வரும்போது கல்லூரி மாணவர்கள் பிரதமரை கேலி செய்யும் வகையில் பக்கோடா விற்றனர்.

இதனை சற்று தாமதமாக புரிந்து கொண்ட போலீசார் பின்னர் பக்கோடா விற்பனை செய்த மாணவர்களை கைது செய்து அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். பாஜக ஆட்சியில் பக்கோடா விற்றால் கூட கைது செய்கின்றனர் என்று எதிர்க்கட்சியினர் இதற்கும் கேலி செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :