வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 மே 2019 (10:17 IST)

”அடுக்குமொழி அம்மாளு” வெட்கமா இல்ல? தமிழிசையை விமர்சித்த முரசொலி!

ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருவதாக கூறியடதையடுத்து தமிழிசையை முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. 
 
பாஜகவுடன் பேச திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி வருவது உண்மைதான். 5 அமைச்சர் பதவிகளை பாஜகவிடம் திமுக கேட்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலியில் தமிழிசை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. ”அடுக்குமொழி அம்மாளு" தமிழிசை வெட்கப்பட வேண்டாமா? என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பின்வருமாறு... 
 
தமிழகத்தில் தாமரையை மலர செய்ய புறப்பட்டிருக்கும் அடுக்குமொழி அம்மாளு, பேட்டி ஒன்றில் பாஜகவுடன், திமுக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார். அரைகுறைகளை எல்லாம் தலைவராக்கினால், காமிராவைப் பார்த்த உடன் இப்படித் தத்துப்பித்தென்று உளறிக் கொட்டும் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவையா? 
உண்மையாகவே அப்படி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தால், ஒரு கட்சியின் தலைமை வகிக்கும் ஒருவர் அதனை பகிரங்கமாக கூறுவாரா? இவர்பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் என்று கூறுவதிலிருந்தே, இது அப்பட்டமான பொய் என்று தெரியவில்லையா? 
 
தமிழகத்தின் அரசியல் கட்சியோடு, தனது கட்சி பேச்சுவார்த்தை நடப்பது தமிழகத்தின் தலைவரான தமிழிசைக்கே தகவலாகத்தான் தெரியுமென்றால், அது வெட்கக்கேடல்லவா? இந்த வெட்கங்கெட்ட நிலையில், தலைவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள், பாரம்பரியப் பெருமை பேசலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது.
 
இதேபோல் நேற்று நமது அம்மா நாளிதழில் கமலைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. பொலி காளைக்குப் புரியுமோ புனிதமிகு இந்து தர்மம் என்னும் தலைப்பில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.