காஷ்மீர் பிரிக்கப்படுதால் பாஜகவுக்கு கிடைக்கும் லாபம் என்ன??

Last Updated: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (16:25 IST)
காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதால் பாஜகவிற்கு என்ன ஆதாயம் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இணைய துண்டிப்பு முடக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  
 
எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது. 
உண்மையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவாதால் தேர்தல் சமயத்தில் பாஜகவிற்கு அனுகூலமான நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதால் காஷ்மீரின் அனைத்து வலுவான மாநில கட்சிகளும் மொத்தமாக வலிமை இழக்கும் வாய்ப்புள்ளது. 
 
அப்படி மாநில கட்சிகள் இங்கு வலிமை இழக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறக்கூடும். பாஜக நிர்வாக ரீதியாகவும் இரண்டு பகுதிகளை எளிதாக நிர்வகிக்க முடியும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :