காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக ஆதரவு!!

Last Updated: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:01 IST)
காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 
 
அமர்நாத் யாத்திரையை சீர்குலை பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  
 
பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார். அதன் பின்னர் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமித் ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307 நீக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுகிறது. 
சட்டப்பேரவை கூடய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரெதேசமாக லடாக்கும் இருக்கும் என அறிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 
 
ஆம், ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் அதிமுக ஆதரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு 370ஐ காஷ்மீருக்கு தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டபிரிவு 370ஐ நீக்குவதன் மூலம் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என எம்பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
அதிமுக மட்டுமின்றி பிஜு ஜனதா தளம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :