1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (08:33 IST)

கர்நாடகா இடைத்தேர்தல்: பாஜகவை குஷிப்படுத்திய முன்னிலை நிலவரம்

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது
 
இதனை அடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் கட்சித்தாவல் சட்டத்தின்படி 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதில் 15 தொகுதிகளில் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது
 
இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று சற்று முன்னர் தொடங்கிய நிலையில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக 7 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியை தொடர வேண்டுமெனில் குறைந்தது ஆறு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் 7 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் இருப்பது பாஜக ஆட்சியை தப்பித்துக் கொண்டது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் 15 தொகுதிகளின் இறுதி முடிவு வரும் வரை பொறுமை காப்போம்