ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு: எச்.ராஜா டுவீட்

Last Modified வெள்ளி, 6 டிசம்பர் 2019 (22:53 IST)
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர், இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்ட நடவடிக்கையை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்

பெரும்பாலான பொதுமக்கள் பெண்ணியவாதிகள் அரசியல்வாதிகள் திரையுலக பிரமுகர்கள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் சட்டத்தை காரணம் காட்டி இந்த நடவடிக்கை தவறானது என்று கூறி வருகின்றனர்

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் ஹைதராபாத் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. இது போன்ற மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைகள் தான் சரியான தீர்வு என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. உனாவ் படுகொலை கற்பழிப்பு குற்றவாளிகள் பைலில் வெளிவந்த 5 நாட்களுக்குள் தாங்கள் கற்பழித்த பெண்ணைப் படுகொலை செய்கின்றனர். இந்த மிருகங்களுக்கு ஹைதராபாத் முறைதான் சரியான தீர்வு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.


இதில் மேலும் படிக்கவும் :