செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (15:29 IST)

அவமானம் முதல் ஆபாசம் வரை: குஜராத் தேர்தலில் மோடியின் 6 வியூகங்கள்....

குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், வெற்றி பெற்று பிரதமர் மோடியின் கவுரவம் தப்பித்துள்ளது. குறிப்பாக தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வெற்றி பெறுவதற்கு மோடி அரசு பெரும் முயற்சிகளை எடுத்தது. தேர்த்தில் வெற்றி பெற பாஜக கையில் எடுத்த ஆறு முக்கிய களவியூகங்கள் பின்வருமாறு....
 
நீச் ஆத்மி - மணிசங்கர் அய்யர் விமர்சனம்:
 
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் அய்யர், மோடியை கடுமையாக விமர்சித்தார். மோடியை நீச் ஆத்மி என விமர்சித்தார். நீச் ஆத்மி என்பது தீண்டதகாதவன், பிறப்பால் தாழ்ந்தவர் என்பதை குறிக்கும். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தல் சமயத்தில் பாஜக இதை சரியாக பயன்படுத்தியது.
 
ஜிஎஸ்டி-ல் அதிரடி மாற்றங்கள்: 
 
குஜராத், இமாசல பிரதேசத்தின் தேர்தலுக்கு முன்பாக ஜிஎஸ்டி வரியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிகபட்ச வரியான 28% சதவிகிதத்தில் இருந்து 18%, 12%, 0 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதுவும் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
விவசாய கடன்: 
 
குஜராத்தில் விவசாயிகளை கவரும் வண்ணம் ரூ.3 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 25 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். இதுவும் வாக்குகளாக மாறியது.
 
ஆன்டி- பாகிஸ்தான்: 
 
மணிசங்கர் அய்யரை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக சாடினார் மோடி. மணிசங்கர் அய்யர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அழைத்து ரகசியமாக தலைவர்களை சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து அவர் சார்ந்தபேசியதாக குற்றம் சாட்டினார். இந்த வியூகமும் நல்ல பலனை கொடுத்தது.
 
ஹர்திக் பட்டேல் ஆபாச வீடியோ:
 
பட்டேல் சமூகத்தினர் காங்கிரஸுக்கு ஆதரவி அளித்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவினரே ஆச்சரியப்படும் வகையில் மக்கள் கூட்டத்தை திரட்டி மிரள வைத்தார் ஹர்திக்.
 
ஆனால், குஜராத் தொலைக்காட்சி ஒன்றில் ஹர்திக் பட்டேலும், ஒரு பெண்ணும் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. ஹர்திக் பட்டேல் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும், இது பாஜகவினருக்கு பலமாய் அமைந்தது. 
 
சல்மான் நிசாமியின் ட்விட் சர்ச்சை: 
 
இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள சல்மான் நிசாமி டுவிட்டர் மூலம் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அதில், ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, அவருடைய பாட்டி இந்திரா காந்தி என குறிப்பிட்டு மோடிக்கு தாய் - தந்தை யார்? என்று கேட்டு இருக்கிறார். நாம் எதிரிகளிடம் கூட இது போன்ற கேள்விகளை கேட்க மாட்டோம் என்று பிரச்சாரம் செய்தார் மோடி. இதுவும் மோடிக்கு தேர்தலில் கைகொடுத்துள்ளது.