செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (08:58 IST)

அப்போ 40 தொகுதி வெற்றி.. மத்தியில் ஆட்சி! இப்போதும் 40 தொகுதி வெற்றி! – திமுக போடும் கணக்கு!

MK Stalin with Kalaingar
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைவது குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளோடு விவாதிக்க உள்ளது.



இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கும் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம், புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

2004ம் ஆண்டில் இதேபோல தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு மொத்தமாக 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. அதற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போது 40 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வென்றுள்ளது.


அன்று 40 தொகுதிகளை வென்றபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததுடன், 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்நிலையில் இப்போது 40 வெற்றி பெற்றுள்ள நிலையில் மத்தியில் ஆட்சி, மந்திரி பதவி என கருணாநிதி சாதித்ததை மு.க.ஸ்டாலினும் சாதித்து காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவுக்கு தற்போது ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க வேண்டியுள்ளது. அந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை தன்பால் ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதற்கு முன்னதாக இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்படுகிறார்.

Edit by Prasanth.K