ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூன் 2024 (09:24 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன சந்திரபாபு நாயுடு.. இந்தியா கூட்டணிக்கு சென்று விடுவாரோ?

chandrababu naidu
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் ஏற்கனவே பல ஆண்டுகால நண்பர்கள் என்ற நிலையில் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துக்கு சந்திரபாபு நாயுடு நன்றி என கூறியிருப்பதை அடுத்து இந்தியா கூட்டணி பக்கம் சந்திரபாபு நாயுடு சென்று விடுவாரோ? என்ற அச்சத்தில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணி 293 தொகுதிகள் பெற்றிருந்தாலும் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதும் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகிய இருவரும் தங்களுக்கு வேண்டிய முக்கியமான துறைகளை கேட்டு பெற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்ததற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இருவரும் பல ஆண்டுகால நண்பர்கள் என்பதால் இருவரும் ஒரே கூட்டணியில் இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva