’பில்லி சூனியம்’ வைத்துப் பாலியல் பலாத்காரம் ..? இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டத்தில் வசிப்பவர் ஒரு இளம்பெண் (30). இவரது கணவர் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் இப்பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி இவர் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெண்னின் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணை வீட்டுக்கு வெளியே இழுத்துவந்து வீதியில் நிர்வாணமாக நடக்கவைத்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்து வீட்டார். இந்தப் பெண்ணைக் காப்பாற்றி ஆடை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதனையடுத்து மறுநாள் தான் பாதிக்கபட்டதை, அப்பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் உறவினர்கள் , பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரை கைது செய்து அழைத்து சென்று விசாரித்தனர். அதற்கு அவர், தனக்கு யாரோ பில்லி சூனியம் வைத்தது போலிருந்ததால் அப்படி செய்தேன் என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுசம்பந்தமாக போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.