வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (10:55 IST)

பைக்-டாக்ஸி புக் செய்து கேன்சல் செய்த பெண் மருத்துவருக்கு ஆபாச வீடியோ: ஓட்டுநர் கைது

bike taxi
பைக் டாக்ஸி புக் செய்து, பின்னர் கேன்சல் செய்த பெண் மருத்துவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பைக் ஓட்டுனர் கைது செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் டாக்ஸிகளைப் போலவே தற்போது பைக் டாக்சிகள் பிரபலமாகி வருகிறது. ஒரு சிங்கிள் நபர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வேகமாகவும் குறைந்த கட்டணத்திலும் செல்ல பைக் டாக்ஸி உதவியாக உள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் பைக் டாக்ஸி புக் செய்து, பின்னர் கேன்சல் செய்த பெண் மருத்துவருக்கு ஆபாச வீடியோ அனுப்பியதால் பைக் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புக் செய்த பைக் நீண்ட நேரமாக பைக் வராததால், அந்த பெண் மருத்துவர் புக்கிங்கை கேன்சல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக, அவரது எண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் வந்ததாகவும், அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பைக் டாக்ஸி ஓட்டுனரை சில மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஓட்டுனரிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை முடிந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva