செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (09:49 IST)

பைக்கில் சென்று போதைப்பொருள் டோர் டெலிவரி; சென்னையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது..!

Arrest
சென்னையில் பைக்கில் சென்று போதை பொருள் சப்ளை செய்த நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் போதைப் பொருள் விற்பதாக ரகசிய தகவல் போலீசருக்கு கிடைத்த நிலையில், அங்கு வாகன சோதனை நடைபெற்று வந்தன. அப்போது பைக்கில் வந்த நான்கு இளைஞர்களை போலீசார் மடக்கி பிரித்து பரிசோதனை செய்தபோது, அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது, 50 கிராம் எடையுள்ள போதைப் பொருள், ஐபோன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பைக்கில் சென்று அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு போதை பொருளை டோர் டெலிவரி செய்வதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இது குறித்து போலீசார் கோரிக்கையில், சென்னையில் போதைப் பொருள் நெட்வொர்க் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றும், போதைப் பொருளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில், நான்கு பேரை போதைப் பொருள் வழக்கில் கைது செய்துள்ளதாகவும், போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran