திரிஷாவுக்காக வெயிட் பண்ணும் 'விடாமுயற்சி' டீம்!
நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றிக்குப்பின் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் அஜர்பைஜானில் இப்பட ஷூட்டிங் நடைபெற்றது. இதில், அஜித், திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, 2 வது கட்ட ஷூட்டிங் விரைவில் ஜார்ஜியாவில் தொடங்கும் என தகவல்வெளியானது.
அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட் எப்போது என ரசிகர்கள் தொடந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தை தயாரிக்கும் லைகா, இப்படத்தின் 3 வது கட்ட ஷூட்டை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் லைகாதான் தயாரித்து வருகிறது என்பதால், சமீபத்தில் பண நெருக்கடியால் சிக்கியிருந்த நிலையில், அதிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே விடாமுயற்சி பட ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஆனால், இப்பட ஷூட்டிங் தாமதத்தால் திரிஷா கொடுத்த கால்ஷீட் தேதி முடிந்ததாகவும், தற்போது அவர் கமலின் தக்லைஃப் பட்த்தில் பிஷியாக நடித்து வருவதால், விடாமுயற்சி படக்குழுவினர் திரிஷாவிடம் மறுபடி தேதிகொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகிறது.