1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (08:54 IST)

உண்மை தெரியாமல் பாலா மீது குற்றஞ்சாட்டுவதா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்..!

இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின் போது அடித்து விட்டதாக நடிகை ஒருவர் பேட்டி அளித்ததாக  ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த நடிகை தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்

‘வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை மமீதா பைஜூ சமீபத்தில் பேட்டி அளித்த போது இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின்போது அடித்ததாக கூறியதாக செய்திகள் வெளியானது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகை மமீதா பைஜூ  இதற்கு விளக்கம் அளித்துள்ளார். நான் கூறிய ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடிட் செய்து தவறாக பரப்பி விட்டார்கள் என்றும் நான் என்னென்ன சொன்னேன் என்பதை மொத்தமாக அந்த வீடியோவை பார்த்தால் தான் அனைவருக்கும் புரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலா மட்டும் இன்றி வணங்கான் படத்தில் உள்ள உதவி இயக்குனர்கள் மற்றும் டீம் முழுவதுமே என்னை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பார்த்துக் கொண்டார்கள் என்றும் அவர் என்னை அடித்தார் என்பது தவறான புரிதல் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாலா குருத்து கூறி இருப்பதாவது:

உண்மையைத் தெரிந்து கொள்ளும் முன் பொய்யானதை பிடித்துக் கொள்கிறோம். அல்லது ஒருவரைப் பற்றிய தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறோம். இயக்குநர் பாலா அண்ணன் படைப்புக்காக போராடக்கூடியவர். அதற்காக மெனக்கிடக் கூடியவர். பல கதாபாத்திரங்களை வேறொரு உலகத்தில் நின்று சிந்தித்து ஆக்கியவர். சம்பந்தப்பட்டவர்களின் உண்மையை அறியாமலே நாம் படபடத்துவிடுகிறோம் பல நேரங்களில்...

Edited by Siva