திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (18:00 IST)

கரணம் தப்பினா மரணம்: 80 அடி செங்குத்து மலை பாதை; அசால்ட்டாக ஏறிய பாட்டிம்மா!

மஹாராஷ்டிராவில் உள்ள மலைக்கோட்டை ஒன்றிற்கு 70 வயது மூதாட்டி ஒருவர் செங்குத்தான பாதையில் ஏறி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஹரிஹர் கோட்டை. மலைமீது உள்ள இந்த கோட்டைக்கு செல்ல ஒரே வழி 80 டிகிரி செங்குத்தான கோணத்தில் உள்ள மலைமீது வெட்டப்பட்டுள்ள சிறிய படிகள்தான். கால் தவறினால் கட்டுபாடின்றி கீழே விழுந்து விடும் ஆபத்து உள்ளதால் இளைஞர்களே அதிகமாக இங்கு சாகச பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆஷா அம்படே என்ற 70 வயது மூதாட்டி கோட்டைக்கு செல்ல 80 டிகிரி செங்குத்து பாதையில் ஏறி சென்றுள்ளார். ஆரம்பத்தில் சிறிது தொலைவுக்கு மேல் ஏறமாட்டார் என்றே அங்குள்ளவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் விடாமுயற்சியுடன் உச்சி வரை வெற்றிகரமாக ஏறியுள்ளார் அந்த மூதாட்டி. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பாட்டிம்மாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.