”கைதுக்கு பயந்தவன் அல்ல நான்”.. எம்.எல்.ஏவின் துணிச்சல் பேட்டி

Last Updated: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (10:42 IST)
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ, தனது வீட்டில் ஏ.கே. 47 வைத்திருந்ததாக தேடப்பட்டு வரும் நிலையில், துணிச்சல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் மோகாமா எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங்கின் மூதாதையர் வீட்டில், ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய சோதனையில், ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

மேலும் அவர் மீது, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீஸார் அவரது வீட்டிற்கு சென்றபோது தப்பி ஓடினார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ. ஆனந்த் குமார் சிங், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ”நான் துப்பாக்கியும், வெடிகுண்டுகளையும் பதுக்கி வைத்திருந்தேன் என்ற கேள்விக்கே இடமில்லை” என கூறியுள்ளார்.

மேலும், கைதுக்கு நான் பயப்படவில்லை, இன்னும் மூன்று நான்கு நாட்களில் நானே போலீஸாரிடம் சரணடைவேன்” எனவும் அந்த பேட்டியில் துணிச்சலாக கூறியுள்ளார்.

பீகார் எம்.எல்.ஏ.வின் இந்த துணிச்சலான பேட்டி பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :