கருத்துக்கணிப்புகள் மக்கள் தீர்ப்பு அல்ல.. கோடி மீடியாவின் பிரச்சாரம்: தேஜஸ்வி
பீகார் சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் சாதகமாக உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அந்தக் கணிப்புகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், இந்த கருத்துக் கணிப்புகள் ஊடகங்களின் பிரச்சாரமே அன்றி, மக்களின் தீர்ப்பு அல்ல என்றும், இவை வெறும் 'உளவியல் அழுத்தங்கள்' என்றும் குறிப்பிட்டார். மேலும், இவை பிரதமர் அலுவலகம் மற்றும் அமித் ஷாவின் அழுத்தத்தால் நடத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டிய அவர், சில ஊடகங்களை சுட்டிக்காட்டி, இது 'கோடி மீடியா'வின் பிரசாரம் என்று விமர்சித்தார்.
கடந்த 2020 தேர்தலை விட 72 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். இது நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக்க அல்ல; அரசாங்கத்தை மாற்றுவதற்கான வாக்குகள் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், இந்த முறை இந்தியா கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
Edited by Siva