வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 ஜனவரி 2019 (21:44 IST)

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதினை இந்நாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
 
வெளியுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், லோக்சபா முன்னவர், திட்டக்கமிஷன் துணைத்தலைவர், போன்ற பல பதவிகளை பெற்று புகழின் உச்சத்தில் இருந்த பிரணாப் முகர்ஜி. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்திய குடியரசு தலைவராகவும் இருந்தார்.
 
அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களை பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இந்த நிலையில் நாட்டிற்காக அவர் செய்த சேவையை பாராட்டி அவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜியுடன் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோர்களும் பாரத ரத்னா விருதை பெறுகின்றானர். நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் மூவருக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்படுகிறது