1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (07:55 IST)

பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பீடி: மாணவிகள் அதிர்ச்சி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்கள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பீடி இருந்தது மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதில் வழக்கம் போல் நேற்று காலை மாணவிகள்  சாப்பிட வந்தபோது ஒரு மாணவியின் உணவில் பீடி இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 
 
இதனை அடுத்து சக மாணவ மாணவிகள் அந்த உணவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர். இந்த விவகாரம் பல்கலைக்கழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தரம் குறைந்த உணவை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் திடீரென போராட்டம் செய்தனர்.
 
இதனை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் இது குறித்து விசாரணை செய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததை அடுத்த மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva