''ஷைவிசாவான்'' குறும்பட டீசர் வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்
புதுடெல்லியில் உள்ள அமிட்டி பல்க்லைக்கழகத்தில் படித்து வரும் மாணவ, மாணவிகள் ஷைவிசாவான் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளனர். இக்குறும்பட டீசரை இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
இந்தக் குறும்பட டீசர் பற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், புதுதில்லி அருகே உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவ மாணவிகள் #ஷைவிசாவான் என்ற ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இக்குறும்படத்தின் முதல் பார்வையை (First Look) புதுதில்லியில் நான் வெளியிட்டேன். இக்குறும்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்துள்ள தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இக்குறும்படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.