1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (18:55 IST)

2 வயது சிறுவன் வயிற்றில் ரிமோட் பேட்டரி.. 20 நிமிடத்தில் சர்ஜரி செய்து எடுத்த மருத்துவர்கள்

battery1
2 வயது சிறுவன் வயிற்றில் ரிமோட் பேட்டரி.. 20 நிமிடத்தில் சர்ஜரி செய்து எடுத்த மருத்துவர்கள்
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவனின் வயிற்றில் ரிமோட் பேட்டரி இருந்த நிலையில் அந்த பேட்டரியை 20 நிமிடத்தில் சர்ஜரி செய்து மருத்துவர்கள் எடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
 
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ரிமோட்டில் உள்ள பேட்டரி வைத்து விளையாடும்போது விழுங்கிவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து உடனடியாக அவர் அந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
சிறுவனின் வயிற்றுக்குள் பேட்டரி இருப்பதை பார்த்த மருத்துவர்கள் உடனடியாக சரி செய்து அதை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சிறுவனின் உயிருக்கே ஆபத்து என்றும் தெரிவித்தனர். 
 
இதனையடுத்து உடனடியாக சர்ஜரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்கள் எண்டோஸ்கோப் மூலம் அந்த பேட்டரியை எடுத்தனர். இதனை அடுத்து தற்போது அந்த சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran