1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 மே 2023 (07:40 IST)

ஒருவழியாக தீர்ந்தது முதலமைச்சர் விவகாரம்.. கர்நாடக முதல்வர் இன்று அறிவிப்பு..!

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்ற குழப்பம் கடந்த ஒரு வாரமாக இருந்த நிலையில் தற்போது அந்த குழப்பத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் சித்தராமையா  மற்றும் டி கே சிவக்குமார் ஆகிய இருவரும் முதலமைச்சர் பதவிக்கு முயற்சி செய்தனர். 
 
இருவரும் மாறி மாறி ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர்களை சந்தித்த நிலையில் தற்போது சித்தராமையா  முதல்வராகவும் டி கே சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன 
 
இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்னும் இரண்டு நாட்களில் காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக இருந்த முதலமைச்சர் பதவிக்கான குழப்பத்திற்கு முடிவு கிடைத்துள்ளது. இருப்பினும் முதலமைச்சர் பதவி கிடைக்காத டி கே சிவமார் அடுத்து என்ன காய் நகத்துவார் என்பதை பொறுத்திருந்து காண்பிக்க வேண்டும்.
 
Edited by Siva