1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 மே 2023 (17:45 IST)

ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிகே சிவகுமார் அவசர ஆலோசனை.. தனி அணி அமைக்கின்றாரா?

TK Sivakumar
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இன்னும் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தியை சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் ஆகிய இருவரும் சந்தித்து முதலமைச்சர் குறித்தும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை செய்தனர்
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் திடீரென தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டிகே சிவகுமார் அவசர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
கர்நாடக மாநில முதலமைச்சர் ஆக சித்தராமையா கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் திடீரென டி கே சிவக்குமார் அவசர ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது
 
 தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனி அணி அமைத்து  பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
Edited by Siva