1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (11:24 IST)

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்-இல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு

அனைத்து வங்கிகளுக்கும் தொடர் விடுமுறை வருவதால் ஏடிஎம்-இல் பணம் எடுப்பவர்கள் மற்றும் வங்கியில் பணபரிவர்த்தனை செய்பவர்கள் முன்கூட்டியே செய்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

மார்ச் 29 மஹாவீர் ஜெயந்தி மற்றும் மார்ச் 30-ம் தேதி புனித வௌ்ளி ஆகியவைகளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. ஏப்.1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை.  ஏப்ரல் 2ஆம்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.


 
எனவே இடையில் மார்ச் 31ஆம் தேதி சனிக்கிழமை மட்டுமே வங்கிகள் இயங்கும் நாள். ஆனாலும் அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே வங்கி வாடிக்கையாளர்க்ள் இந்த வாரம் வியாழக்கிழமையும் அதற்கு முன்னரும் தேவையான பணப்பரிவர்த்தனைகளையும், ஏடிஎம்-இல் இருந்து தேவையான பணத்தை எடுத்து வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.