வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

கல்லூரி மாணவியின் கனவை நிறைவேற்றிய ராகுல்காந்தி

இந்தியாவில் உள்ள 20க்கும் மேலான மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகா மட்டுமே ஆனால் அந்த மாநிலத்திலும் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.

இருக்கும் ஒரே பெரிய மாநிலத்தையும் இழந்துவிடாமல் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முய்ற்சியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

இந்த நிலையில் மைசூரில் உள்ள மகாராணி மகளிர் கல்லூரியில் ராகுல் காந்தி இன்று மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது, ஒரு முஸ்லிம் மாணவி ராகுல்காந்தியிடம் தனது வாழ்நாள் கனவு உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்பது, அதை நிறைவேற்றுவீரகளா? என கேட்க உடனே சிரித்து கொண்டே ஒப்புக்கொண்ட ராகுல்காந்தி மேடையை விட்டு கீழே இறங்கி செல்பி எடுக்க அந்த மாணவிடன் போஸ் கொடுத்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.