1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 17 நவம்பர் 2022 (11:24 IST)

முதல்முறையாக பெங்களூரு - சான்பிராஸ்சிஸ்கோவுக்கு நேரடி விமானம்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Flight
இதுவரை டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து மட்டுமே அமெரிக்காவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பெங்களூரில் இருந்தும் அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரமான சான்பிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் முக்கிய நகரமான சான்பிரான்சிஸ்கோவுக்கு முதல் முறையாக நேரடி விமானம் இயக்க இருப்பதாக விமான துறை அறிவித்துள்ளது.
 
பெங்களூரிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்று வருவதற்கு ரூபாய் 83 ஆயிரத்து 766 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இனிமேல் அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் மும்பை அல்லது டெல்லி செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெங்களூரில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு சென்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
Edited by Siva