வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (19:39 IST)

விருந்திற்கு வரவழைத்து முன்னாள் காதலரைக் கொன்ற காதலி கைது!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் முன்னாள் காதலரை விருந்திற்கு அழைத்து, காதலி இரும்புத் தடியால், அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள துர்காப்பூர் மாவட்டத்தின் கோபால்மத் நகரில், தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு இளைஞரின் உடலைக் கண்டெடுத்தனர்.

இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், துர்காப்பூர் பினாசிடி  நாகபள்ளி பகுதியைச் சேர்ந்த அவினாஷ் ஜன்(19) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, நைன்  நகரைச் சேர்ந்த ஆப்ரீனிடம் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், ஆப்ரீனுக்கு, ப்பிஜூபாராவைச் சேர்ந்த பிட்டு குமார் சிங் என்பருடன் புதிதாகக் காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதன்பின்னர், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியனர் போலீஸார். அதில், ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு, முன்னாள் காதலரான அவினாஷை வரவழைத்துக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கூறியபடி குறிப்பிட்ட  நாளில், அவினாஷ், விருந்திற்கு வந்ததும் அவருக்கு மதுபானம் கொடுத்து, பின் இரும்புக் கம்பியால் அவரை அடித்து, அவர் உயிரிழந்த பின், இருவரும் அவரது கைகளைக் கட்டி, இருசக்கர வாகனத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வீசியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து, இன்று துர்காப்பூர் சப் டிவிசனல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.