வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (14:37 IST)

பைக் டாக்சிக்கு தடை ? அரசு அதிரடி உத்தரவு

bike taxi
கர்நாடகம் மாநிலத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளதாகதகவல் வெளியாகிறது.
 
கர்நாடகம்   மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
 
கடந்த 22021 ஆம் ஆண்டு மின்சார பைக் டாக்ஸி தொடர்பான அறிவிப்பு வெளியான  நிலையில், அதை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
 
குறிப்பாக இந்த மின்சார பைக் டாக்ஸி திட்டத்தை கர்நாடக அரசு தடை செய்துள்ளது. மின்சார பைக் டாக்ஸி திட்டமானத் 2021 மோட்டார் வாகனச் சட்டத்தை மீறுவதாகவும், சட்டம் ஒழுங்கைச்  சீர்குலைப்பதாக இருப்பதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே மின்சார பைக்டாக்ஸி திட்டத்திற்கு ஆட்டோ, ரிக்ஷா தொழிற்சங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த   நிலையில்,  இதுதொடர்பாக முடிவெடுக்க ஒரு குழுவை அரசு அமைத்திருந்தது. அந்த குழுவின் பரிந்துரையின்படி அரசு இந்த முடிவை கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.