வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (22:06 IST)

மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் !

மஹாராஷ்டிரா மாநிலம் முன்னாள் உளவுத்துறை அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில மந்திரியாக அனில் தேஷ்முக் கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்றார். அப்போது, இவர் மீது முன்னாள் போலீஸ் கமிஷனர் குற்றம்சாட்டியதை அடுத்து அமலாக்கத்துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எனவே அவரது பதவி பறிக்கப்பட்டது. தற்போது அனிஷ் தேஷ்முக் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எனவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அனிஷ் தேஷ்முக் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து  அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்