வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 24 ஜூன் 2017 (15:52 IST)

ஆந்திராவில் 4 கால்களுடன் பிறந்த குழந்தை

ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவில் 4 கால்களுடன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனை முன்பு மக்கள் கூட்டம் கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் காக்கி நாடா மாவட்டத்தில் உள்ள தபஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மணிமாலா(25) என்பவருக்கு நேற்று மாலை தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 4 கால்களுடன் பிறந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ஓட்டிய படி 4 கால்களும் உள்ளன. இதுகுறித்து குழ்ந்தை நல சிறப்பு மருத்துவர் கூறியதாவது:-
 
10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி வித்தியாசமாக பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தையும் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
 
இந்நிலையில் இந்த செய்தி அப்பகுதியில் தீயாக பரவியது. இதையடுத்து 4 கால்களுடன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனை முன்பு மக்கள் கூட்டம் கூடியது. குழந்தையை பார்க்க மருத்துவமனை அனுமதிக்கவில்லை.