1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (22:56 IST)

அடப்பாவிகளா! என்.டி.டி.வி ரெய்டுக்கு இதுதான் காரணமா?

தனியார் வங்கி ஒன்றுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாக என்.டி.டி.வி இணை இயக்குனர் பிரணாய்ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது சமீபத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.



 


இந்த நிலையில் திடீரென நேற்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, என்டிடிவி நிறுவனர் பிரணாய்ராய், பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறி அதற்கான ஆதாரங்களையும் இணையதளம் ஒன்றில் நேற்று வெளியிட்டார். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் பிரணாய்ராய் வீடு உள்பட 4 இடங்களில் சிபிஐ சோதனை
நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன் ஒரு அதிர்ச்சி தகவல் இணையதளங்களில் மிக வேகமாக கசிந்து வருகிறது. அதாவது பிரபல யோகா குருபாபா ராம்தேவ் என்.டி.டி.வி-ஐ வாங்க முயற்சி செய்து வருவதாகவும், அதனால்தான் மத்திய அரசு பிரணாய் ராய்க்கு நெருக்கடி அளிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாபா ராம்தேவ் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இதுவொரு ஆதாரமற்ற தகவல் என்றும் என்.டி.டி.வியை வாங்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாறி மாறி வரும் செய்தியை பார்த்து கொண்டிருக்கும் அப்பாவி பொதுமகக்ள் கூறியது என்ன தெரியுமா? அதுதான் இந்த செய்தியின் டைட்டில்?