செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 நவம்பர் 2019 (12:45 IST)

மேல்முறையீடு செல்வோம்- சன்னி வக்ஃப் வாரியம்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என்றும்,  அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று இடத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து சன்னி வக்ஃப் வாரியம் கூறுகையில், ‘5 ஏக்கர் நிலம் எங்களுக்கு மதிப்புடையது இல்லை என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மேல்முறையீடு செல்வோம் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்றும், ஆனால் தீர்ப்பால் திருப்தி அடையவில்லை என்றும் சன்னி வக்பு  வாரிய வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்.