செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (22:46 IST)

அயோத்தி வழக்கு : 3 தரப்பு வாதங்கள் நிறைவு... தீர்ப்பு ஒத்திவைப்பு !

பாபர் மசூதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு 3 தரப்பு உரிமை கோரியது. சன்னு வஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா , ராம் லல்லா அமைப்புகள் அலஹாபாத் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இம்மூன்று அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இடத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாமென அளித்த நீதிமன்றத்தி  இந்த தீர்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வழக்கை முடிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டும் தீர்வுகள் எட்டப்படவில்லை.
 
இதனையடுத்து , இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தொடர்ந்து 40 நாட்கள்,  விசாரணைக்குப் பிறகு , இன்று தீர்ப்பை  ஒத்தி வைத்துள்ளது.
 
அயோத்தி பாபர் மசூதி வழக்கில் இன்றுடன் ஒட்டு மொத்த விசாரணையும் முடிக்கப்படுவதாக நீதிபதி சஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மூன்று தரப்பினரின் வாதம்ங்களை இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அயோத்தி வழக்கின் தீர்ப்பு தேதியை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒத்திவைத்துள்ளார். அதாவது தலைமைநீதிபதி ஓய்வு பெறும்  நாளான நவம்பர் 17 க்குள் அவர் இந்த தீர்ப்பை வெளியிடுவார் என பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
 
இதனால் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.