அவுரங்காபாத் பெயர் மாற்றம் - அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் மற்றும் உஸ்மனாபாத் நகரம் பெயர் மாறம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.
தற்போது அங்கு அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் அவசரக் கூட்டம் இன்று நடந்தது.
இதில், அவுரங்காபாத் என்று அழைக்கப்படும் மாவட்டம் சம்பாஜி நகர் எனவும்,அதேபோல், உஸ்மனாபாத் என்ற நகர் இனிமேல் தாராஷிவ் என்றும், நவி மும்பை சர்வதேச விமான நிலையம் டி.பி.பாட்டீல் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அமைச்சர்வை ஒப்புதல் அளித்துள்ளது.