1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (14:26 IST)

என் இதயத்துக்கு நெருக்கமான நாள் – அத்வாணி கருத்து!

ராமர் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்படுவது குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வாணி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் இன்று கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜகவின் மூத்த தலைவரும் நீண்ட காலமாக ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பேசி வந்தவருமான அத்வாணி உடல் நிலை காரணமாக கலந்துகொள்ளவில்லை.

ஆனாலும் இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ‘1990 ஆம் ஆண்டு அயோத்தி வரையிலான ராம் ராத் யாத்திரை செல்ல என்னை விதியே தூண்டியது. சில கனவுகள் பலிக்க நாளாகும். ஆனால் இதுபோன்ற ஒரு கனவு என் இதயத்துக்கு நெருக்கமானது. இந்த நாள் என் இதயத்துக்கு நெருக்கமன நாள்.’ எனத் தெரிவித்துள்ளாரர்.